புதுடெல்லி: ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் தாங்கள் ஈட்டிய பொருளில் ஏழைகளுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் ஈகை குணத்தை எடுத்துக் காட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது ஈகைத் திருநாள். தியாகத் திருநாளான இன்று ஆடுகளை ’குர்பான்’ செய்து, அனைவருக்கும் பகிர்ந்தளிப்பார்கள். எனவே பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும். அதையடுத்து பக்ரீத் பண்டிகை நாளன்று ஒரு ஜோடி ஆடு 4.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். ஒரு ஆட்டின் விலை இரண்டேகால் லட்சம் ரூபாய்! அப்படி என்ன இந்த ஆட்டில் விசேஷம் என்று கேட்கிறீர்களா? இந்த ஆடுகளுக்கு தீவனமாக புல்லும் தழைகளும் போடவில்லை. தினமும் முந்திரிப் பருப்பு, பிஸ்தா, பாதாம், இனிப்புகள் மற்றும் பழச்சாறுகள் கொடுத்து புஷ்டியாக வளர்க்கப்பட்ட ஆடுகள்.


இது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த உண்மை சம்பவம். புலந்த்ஷஹர் நகரில் சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனையாகின. அதில் இரண்டு ஆடுகள் மட்டும் தலா இரண்டேகால் லட்சம், ஜோடி நான்கரை லட்சம் என்று விற்கபட்டது என்று பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. 


இன்று பக்ரீத் என்பதால் நேற்று செவ்வாயன்று லக்னோவில் கோமதி ஆற்றின் அருகே உள்ள சந்தையில் இந்த விலையுயர்ந்த ஜோடி ஆடுகள் மனிதனுக்கு விற்கப்பட்டன.


Also Read | Haj Pilgrimage: மெக்காவில் கொரோனாவுக்கு மத்தியில் பாதுகாப்பான ஹஜ் யாத்திரை


இரண்டு ஆடுகளும் சுமார் இரண்டு வயது ஆனவை. ஒரு ஆடு 170 கிலோ, மற்றொரு ஆடு 150 கிலோ எடை கொண்டவை. தினசரி ஒரு ஆட்டின் உணவுக்கான செலவு 600 ரூபாய் ஆகியிருக்கிறது.


முந்திரி பருப்புகள், பிஸ்தா, பாதாம், இனிப்புகள் மற்றும் பழச்சாறுகள் என மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட ஆடுகள் அவை. இதற்குக் காரணம் என்ன? ஆரோக்கியமான உணவைக் கொடுத்தால், நல்ல ஆரோக்கியமான இறைச்சியை கொடுக்கும் என்பதால் இப்படி சிறப்பு கவனிப்பு கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன இந்த ஆடுகள். 


அதுமட்டுமல்ல, இந்த ஆடுகள் தினமும் குளிக்க வைக்கப்பட்டன. அதுவும் ஷாம்பு கொண்டு தான் குளிக்க வைக்கப்பட்டன. ஏன் தெரியுமா? அவற்றின் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்பதற்காக தான். இதுமட்டுமில்லை. ஆடுகளுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டு பத்திரமாக பாதுகாத்திருக்கிறார்கள்.  


இவ்வளவு விலை கொடுத்த வாங்கிய ஆட்டின் சொந்தக்காரர், கோவிட் வழிகாட்டுதல்களை கடைபிடித்து ஆடுகளை குர்பான் செய்தார்.


உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஈத்-உல்-ஆதா எனப்படும் பக்ரீத், மக்காவில் ஹஜ் யாத்திரை முடிவடைவதைக் குறிக்கும் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத், ஆடு, செம்மறி, ஒட்டகம், எருமை போன்றவற்றை தியாக பலியிடும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.


Also Read | பக்ரீத் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR