RTO அதிகாரிகள் கடமையை சரிவர செய்யாவிட்டால், பொதுமக்களிடம் அடி வாங்க நேரிடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எச்சரிகை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசாங்க அதிகாரிகளுக்கு இன்னொரு எச்சரிக்கையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அவர்களிடம் தங்கள் பணிகளை முறையாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இல்லை என்றால் அவர்களை அடிக்குமாறு பொதுமக்களிடம் கூறுவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் எந்தப் பிரச்சினையைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், RTO அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டத்தில் பேசியதை எடுத்துரைத்தார்.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தான், அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பதைப் போல், அரசின் சேவகர்களான ஆர்டிஒ அதிகாரிகள், மக்களுக்கு நேரடியாக பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்றார். குறிப்பிட்ட நாட்களுக்குள் பொதுமக்களின் குறைகளை தீர்க்காவிட்டால், சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக் கொண்டு அந்த அதிகாரிகளை அடித்து துவைக்குமாறு தான் பொதுமக்களிடம் தெரிவித்து விடுவேன் என்று எச்சரித்ததாக கூறினார்.



எந்த முறையில் நீதி வழங்கப்படவில்லையோ, அதனை தூக்கி எறியுமாறு தனது ஆசிரியர்கள் கற்பித்துள்ளதாக கட்காரி தெரிவித்தார். பொதுமக்கள் சந்திக்கும் எந்த எந்த பிரச்சனையை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் கட்காரி இவ்வாறு பேசினார் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.


கட்கரி அதன் முதல் பதவியில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் மிகவும் பிரபலமான மற்றும் அதிக செயல்திறன் கொண்ட அமைச்சர்களில் ஒருவராக இருந்து வருகிறார், மேலும் உள்நாட்டு கடல் வழித்தடங்களை கட்டியெழுப்புவதற்கும் போக்குவரத்து அமைச்சராகவும் அவர் பணியாற்றியதற்காக பாராட்டப்பட்டார்.