மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்!!
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்!!
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகளின் ஆட்சிக்காலம் நவம்பரில் முடிவடையும் நிலையில், அம்மாநிலங்களில் தேர்தல் தேதி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்து வருகிறார்.
பாரதீய ஜனதா கட்சி தற்போது இரு மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது. மக்களவை தேர்தலில் 2019 ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பின்னர் இது முதல் தேர்தல் போராகும். முந்தைய சட்டமன்றத் தேர்தல்களை விட சிறப்பாக செயல்படுவதாக பாஜக நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், காங்கிரசும் என்சிபி போன்றவர்களும் தங்கள் முயற்சிகளில் எந்தவிதமான கல்வியையும் விட்டுவிட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர் கூறுகையில்; ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைகளில் பதவிக் காலம் நவம்பரில் முடிவடைகிறது. ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 2-ல் முடிவடைகிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 9-ல் முடிவடைகிறது. இந்த தேதிகளுக்கு முன்னால், ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.
மேலும், மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஹரியானாவில் 90 தொகுதிகள் உள்ளன. மகாராஷ்டிரா, ஹரியானாவில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஆய்வுகளை செய்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் நடத்துவது தொடர்பாக இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1.82 கோடி. மகாராஷ்டிராவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8.94 கோடி ஆக உள்ளது. மகாராஷ்ட்ரா மற்றும் அரியானாவில் அக்டோபர் 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு இறுதிநாள். வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 7. செப்டப்மர் 27 ஆம் தேதி மகாராஷ்ட்ரா மற்றும் அரியானாவில் வேட்பு மனு தாக்கல் தொடங்கும்.
மகாராஷ்ட்ரா மற்றும் அரியானாவிற்கு சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும். அக்டோபர் 24 ஆம் தேதி மகாராஷ்ட்ரா மற்றும் அரியானாவில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படு தேர்தல் முடிவுகள் வெளியிட்டப்படும். மேலும், தேர்தல் பிரச்சாரங்களின்போது பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தேர்தல் ஆணையர்.