மேற்கு வங்க தேர்தல் 2021: நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு சாதனை படைத்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா போருக்கு எதிராக மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளதா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஆனால் மேற்கு வங்காளத்தில் இன்னும் இரண்டு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் வங்காளத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் கொடூரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல் 2021 (West Bengal Election 2021) குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 


அதாவது அரசியல் கட்சிகள் மெகா சாலை பேரணி நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது மட்டுமல்லாமல், மேற்கு வங்கதேர்தல் பரப்புரை கூட்டங்களில் 500 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டுள்ளது. 


ALSO READ |  Corona Vaccine Price Hike: கொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநில அரசுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600


கொரோனா விதிகளை மீறும் அரசியல் கட்சிகள்:
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கோவிட் மீட்பு விதிகளை அரசியல் கட்சிகள் மீறுவதையும், பொதுக் கூட்டத்தின் போது பல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் பாதுகாப்பு விதிகளை இன்னும் சரியாக பின்பற்றவில்லை என்பதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த உத்தரவு நேற்று இரவு 7 மணி முதல் பொருந்தும். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.


பிரதமர் மோடி தேர்தல் பேரணிகளை ரத்து செய்தார்:
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஏப்ரல் 23 அன்று மேற்கு வங்கத்தில் 4 தேர்தல் பேரணிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தார், அது இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கோவிட் -19 தொற்று நோய்க்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறித்து விவாதிக்கும் உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதாக மோடி ட்வீட் செய்துள்ளார். இதன் காரணமாக அவர் வங்காளத்தில் பேரணிகளை நடத்த மாட்டார். மேற்கு வங்காளத் அடுத்த இரண்டு கட்டங்களுக்கான தேர்தலின் அவரது கடைசி பேரணிகள் இதுவாகும். பிரதமர் மோடி ஏப்ரல் 23 அன்று மால்டா, முர்ஷிதாபாத், செவாலி மற்றும் கொல்கத்தாவில் பேரணிகளை நடத்தவிருந்தார்.


ALSO READ |  மருத்துவ Oxygen ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல தடை போடக்கூடாது


எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு:
மேற்கு வங்கத்தில் மொத்தம் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆறு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள இரண்டு கட்டங்கள் ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. தேர்தலில் பாதிவான வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெறும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR