ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல்கள் என்பது கோலாகலம் நிறைந்தவை... வாக்களிக்கும் நாள் ஒரு பண்டிகைக்கு ஈடானது... அதனால்தான் வாக்குப்பதிவு நாளில், ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் இதுபோன்ற சிறப்பான காட்சிகள் காணப்பட்டன. இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை மட்டுமல்ல,நம் நாட்டின் ஜனநாயகம் எவ்வளவு உயிரோட்டமானது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு சுவாரஸ்ய அரசியல் நிகழ்வுகளைப் மக்கள் பார்த்திருக்கலாம்... அதேபோல இன்று காலையில், ஒரு விவசாய டிராக்டரில் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா வந்திருந்த காட்சி வித்தியாசமாக இருந்தது. அவரை மீடியாக்களின் கேமராக்களும் ஆர்வத்துடன் மொய்த்தன... துஷ்யாந்துடன் டிராக்டரில் நைனா சவுதாலாவும், மேக்னா சவுதாலாவும் வந்திருந்தனர்.


துஷ்யந்த் சவுதாலா டிராக்டரில் வந்திருந்தார் என்றால், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் ஒரு சைக்கிளில் வாக்களிக்க வந்து கலக்கினார்... வாக்குச் சாவடிக்கு வந்த கட்டருடன், அவரது ஆதரவாளர்களும் சைக்கிளில் வந்தனர்.


ஹரியானாவில் தேர்தல் நடைமுறை தொடங்கியதிலிருந்தே மாநிலம் முழுவதும் தேர்தல் திருவிழா ஆடல் பாடல், மேள தாள இசை என சிறப்பாக தேர்தல் திருவிழா களைகட்டியிருந்தது. 


இந்நிலையில் ரோதக்கில் உள்ள சங்வி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடாவை வரவேற்க, நிறைய கிராமப் பெண்கள் பிரபல ஹரியான்வி பாடல்களுக்கு நடனமாடிய காட்சி சிறப்பாக இருந்தது.


இதனிடையே, ஒடிசாவின் பிஜாப்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், நூறு வயதான லோக்னா நாயக் என்ற மூதாட்டி ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி வாக்களிக்க வந்திருந்தார். அவருடன் குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர். இந்த தள்லாத வயதிலும் அவர் ஆர்வத்துடன் வாக்களிப்பதை வாக்குச்சாவடியில் இருந்த அனைவரும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.


பொது மக்கள் வாக்களிப்பதில் ஆர்வத்துடன் இருந்தார்கள் என்பது பொருட்டல்ல... பாலிவுட் நட்சத்திரங்களும் வாக்களிப்பதற்கு முழு வீச்சில் காணப்பட்டனர். மாதுரி தீட்சித் முதல் ஷாருக் கான், அமீர்கான் வரை பாலிவுட் பிரபலங்கள் உட்பட வாக்களிப்பதன் மூலம் தமது உரிமையை நிலைநாட்டினர். அத்துடன் ஜனநாயகத்தில் வாக்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்ற செய்தியையும் நாட்டுக்கு உணர்த்தினர்.