டெல்லி: வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து வாக்கு எண்ணிக்கையின் போது முடிவை தங்களுக்கு சாதமாக மாற்றிக் கொள்ள மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது என சுமார் 21 எதிர்கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு குறித்து சமூக வலைதளங்களில் பல காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உளது. மறுபுறம் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு என இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு எந்திரம் விவாததுக்கு உள்ளாகி உள்ளது. 


இந்தநிலையில், இதுக்குறித்து முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் முறைகேடுகள் நடைபெறலாம் என வரும் தகவலால் நான் மிகவும் கவலையடைந்து உள்ளேன் எனக் கூறியுள்ளார். 


அவர் கூறியிருப்பதாவது:-


வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்களால் நான் மிகவும் கவலையடைந்து உள்ளேன். மேலும் இதை நான் மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. எனவே இந்த விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடித்து வைக்க வேண்டும்.


 



நமது ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கும் எந்தவொரு சந்தேகத்திற்கும் இடம் தரக்கூடாது. மக்கள் அளித்த வாக்குகள் மற்றும் தீர்ப்புக்கள் புனிதமானவை. அதன் மீது எந்தவொரு சந்தேகங்களும் எழக்கூடாது. எனவே நாட்டில் நிலவி வரும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என்ற குற்றச்சாட்டை  தேர்தல் ஆணையம் தீர்த்து வைக்க வேண்டும்.


இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.