மும்பை காவல்துறைக்கு `என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்` பிரதீப் ஷர்மா மீண்டும் வருகிறார்
மஹாராஷ்டிரா அரசாங்கத்தால் நேற்று(புதன்கிழமை) மும்பை காவல்துறையின் "என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்" பிரதீப் ஷர்மா வருகை பற்றி மறு பரிசீலனை செய்யப்பட்டது. இவர் 2008-ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
2006 நவம்பர் 11-ம் தேதி கேங்ஸ்டார் ராம் நாராயண் குப்தா கொல்லப்பட்ட வழக்கில் பிரதீப் ஷர்மா மற்றும் 13 போலீசார் உள்பட 20 பேர் மீது குற்றவாளிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டனர். பிறகு 2006-ம் ஆண்டில் ராம் நாராயண் குப்தா கொலை வழக்கில் ஷர்மா விடுவிக்கபட்டார்.
1983-ம் ஆண்டில் முதல் காவல்துறையுடன் சேர்ந்து பணியாற்றிய பிரதீப் ஷர்மா, தாவூத் இப்ராஹிம் கும்பல் தொடர்பாகவும், லகன் பாய்யா போலி என்கவுண்டர் போன்றவற்றில் அவரது பங்கு ம் முக்கியமானது. 2008 ஆம் ஆண்டு டிஸ்மிஸ் செய்வதற்கு முன்னர், பல என்கவுண்டர்களை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.