ஜம்மு-காஷ்மீர்; பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிசூட்டில் ஒரு வீர்ர காயம்!
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் பகுதியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சூட்டில் ஒரு போர் வீரர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் பகுதியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சூட்டில் ஒரு போர் வீரர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பீஜ்பிஹாராவின் மரஹாமா சங்கம் கிராமத்திற்கு மிக அருகில் நடைப்பெற்று வரும் இந்த துப்பாக்கிசூடு சம்பவமானது தொடர்ந்து இரண்டாவது நாளாக நிகழ்ந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் காவலர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு வீரர்கள் இணைந்த நடத்தி வரும் இந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 3-4 பயங்கரவாதிகள் பிடிப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வாகனம் பலத்த சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாத தாக்குதலில் வீரர்கள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்த விவரம் உடனடியாக வெளியாகவில்லை. துணை ராணுவ பிரிவான ராஷ்டிரிய ரைபிள்ஸின் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
புல்வாமா மாவட்டத்தின் அரிஹால் கிராமத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு சில மணிநேரம் முன்பாக தெற்கு காஷ்மீர் பகுதியில் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது.
இதில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவாரத்திற்கு முன்பு அனந்த்நாக்கில் மற்றொரு துப்பாக்கி சூடு நடந்தது. இதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த காவல்துறை அதிகாரி அர்ஷாத் அகமது கான் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.