புது டெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் (CAA - சிஏஏ) மற்றும் என்ஆர்சிக்கு (NRC - என்.ஆர்.சி) எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜனநாயக நிறுவனங்களுக்கு "பாதுகாப்பு" வழங்க வேண்டும் என்றும் நாட்டின் நன்கு அறியப்பட்ட 154 பேர் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடம் இன்று (வெள்ளிக்கிழமை) வேண்டுகோள் விடுத்தனர். ஜனாதிபதியிடம் முறையிட்டவர்களின் குழுவில், உயர் அரசு மற்றும் அரசியலமைப்பு பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைவரும், சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான பிரமோத் கோலி தலைமையிலான தூதுக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்து, சில அரசியல் கட்சிகள் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வன்முறை செய்யும் எதிர்ப்பாளர்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டியது. ஆனால் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதற்கு காரணமாக எந்தவொரு கட்சி மற்றும் நபரின் பெயர்களை அவர்கள் குறிப்பிடவில்லை.


ஒரு "விரோதமான" சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு, சில அமைப்புகள் சமூகத்தில் பிளவுகளை உருவாக்குவதில் அக்கறை கொண்டுள்ளன என்று தூதுக்குழு கூறியது. போராட்டம் அமைதியாக இருந்தால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகவில்லை என்றால், போராட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் தூதுக்குழுவில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். அந்த குழுவில் 72 முன்னாள் அதிகாரிகள், 56 உயர் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள், கல்விசார் அறிஞர்கள், மருத்துவ வல்லுநர்கள், உயர்நீதிமன்றங்களின் 11 முன்னாள் நீதிபதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.


தூதுக்குழு சார்பில் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
இந்த விவாகரத்தை மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாத்து, அத்தகைய சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டை நேசிக்கும் குடிமக்கள் விரும்புகிறார்கள் என்று அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பதாகக் கூறும் இந்த ஆர்ப்பாட்டங்களின் கட்டமைப்பானது உண்மையில் இந்தியாவின் பெருமையை அழிக்கவும் அதன் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சேதப்படுத்தும் வகையில் இருக்கிறது என்றும் கூறப்பட்டு உள்ளது.


கையெழுத்திட்ட முக்கிய நபர்கள்:
CAA சர்ரம் இந்திய குடிமக்களை பாதிக்காது. எனவே குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை சீர்குலைக்கும் போராட்டங்கள் நியாயப்படுத்த முடியாது" என்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் முன்னாள் மாநிலங்களவை பொதுச் செயலாளர் யோகேந்திர நாராயண், கேரளாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் சி.வி. ஆனந்த் போஸ், முன்னாள் தூதர் ஜி.எஸ். ஐயர், முன்னாள் ரா தலைவர் சஞ்சீவ் திரிபாதி, ஐ.டி.பி.பி முன்னாள் இயக்குநர் ஜெனரல் எஸ்.கே. குப்தா, முன்னாள் இராணுவ துணைத் தலைவர் என்.எஸ். மாலிக் போன்ற பல முக்கிய நபர்கள் அடங்குவார்கள்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.