EPFO Update: பிஎஃப் உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி.... உயர்கிறதா ஊதிய உச்சவரம்பு? ஆலோசிக்கும் அரசு!!
EPFO Hike Wage Cieling: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஊதிய உச்சவரம்பை ரூ.15000 -இல் இருந்து ரூ.21000 ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
EPFO Hike Wage Cieling: சம்பள வர்க்கத்தினர் அனைவரும் பெரும்பாலும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை பணியாளர் வைப்பு நிதியில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளர்களின் கணக்கில் மாதா மாதம் டெபாசிட் செய்கின்றது. பிஎஃப் தொகை பணி ஓய்விற்கு பிறகான காலத்தில் உதவும் முக்கிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, அவ்வப்போது ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களை செய்கிறது, புதிய விதிகளையும் அறிமுகம் செய்கிறது. இவற்றை பற்றிய புதுப்பித்தல்களை ஊழியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
தற்போது இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு (EPFO Members) ஒரு புதிய மகிழ்ச்சியான அப்டேட் வந்துள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஊதிய உச்சவரம்பை ரூ.15000 -இல் இருந்து ரூ.21000 ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊதிய உச்சவரம்பை அதிகரித்து அதன் மூலம் சமூக பாதுகாப்பு வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை பரிசீலித்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்காள் கூறியதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் நீண்ட காலமாக ஊதிய உச்சவரம்பு உயர்வுக்கு (Wage Ceiling) ஆதரவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு சம்பள உச்சவரம்பில் திருத்தம் செய்யப்பட்டது. அப்போது பிஎஃப் சம்பள வரம்பை அரசாங்கம் 6,500 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாக உயர்த்தியது.
மேலும் படிக்க | ஆதார் கார்டில் உங்களால் என்ன என்ன தகவல்களை மாற்ற முடியும்?
ஊதிய உச்சவரம்பு உயர்வு: இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்ப்பட்டால், அதன் மூலம் அதிகமான மக்களை இந்த வரம்பிற்குள் கொண்டு வர முடியும். எனினும், இது அரசாங்கத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். அதே வேளையில், அது அரசாங்கத்திற்கும் சுமையாக இருக்கும். இது குறித்து அரசாங்கம் எடுக்கும் முடிவிற்காக அனைவரும் காத்திருக்கிறாகள்.
EPFO அமைப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தகுதியான ஊழியர்களுக்கு, இபிஎஸ் (EPS) அதாவது ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் (Employees' Pension Scheme) கீழ் உயர் ஓய்வூதியத்திற்கான விண்ணப்ப செயல்முறையை எளிதாக்க நடவடிக்கை எடுத்தது. இபிஎஃப்ஓ, கூட்டுக் கோரிக்கை அல்லது அவர்களது முதலாளி / நிறுவனங்களிடமிருந்து அனுமதி இல்லாதவர்களுக்கு இந்த செயல்முறை வசதியை எளிதாக்கியது. அதிகரித்த ஓய்வூதிய பலன்களுக்கான புதிய வழிகளை இது திறந்தது.
ஜூன் 14, 2023 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் கீழ், தேவையான ஆவணங்கள் மற்றும் அதிக ஓய்வூதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான நடைமுறைகளை EPFO கோடிட்டுக் காட்டியது. வேலை வழங்குநரால் சரிபார்ப்பு, டிஜிட்டல் மாற்றம், மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கு அதிகாரிகளின் பரிசோதனை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இறுதி தகவல் தொடர்பு ஆகியவை இந்த செயல்முறையில் அடங்கும்.
புதிய வழிகாட்டுதல்கள் 1995 ஆம் ஆண்டின் EPS இன் கீழ் 15,000 ரூபாய் சட்டப்பூர்வ வரம்பை விட அதிகமாக உள்ள சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியங்களைக் கணக்கிட உதவுகிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கள அலுவலகங்கள் இப்போது EPF திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை ஏற்கும் வசதிகளுடன் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ