Etihad Airways, இந்தியாவில் உள்ள 6 இடங்களில் இருந்து அபுதாபிக்கான சிறப்பு விமான சேவையை மீண்டும் தொடக்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிஹாட் ஏர்வேஸ், இந்தியாவில் உள்ள ஆறு நகரங்களில் இருந்து அபுதாபிக்கான விமான சேவையை  ஜூலை 12 முதல் 26 வரை வழங்க உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறப்பு விமாங்கள் இயக்கப்படும்.


வெளி நாடுகளுக்கான பயணத்தை அனுமதிக்கும் வகையில் இந்திய அதிகாரிகள் சர்வதேச விமான கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்திய பின், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஜூலை 12 முதல் 26 வரை, பெங்களூரு, சென்னை, கொச்சி, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவைகள் இயக்கப்படும் என்று எதிஹாட் விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அனைத்து பயணிகளும் பயணம் செய்வதற்கு முன்னர் அபுதாபி அரசாங்கத்திடம் ICA ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் தேவையான ஒப்புதல்கள்  இல்லாமல் செக்-இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.


ALSO READ | Singapore பொது தேர்தல்… 61 ஆண்டுகள் கடந்தும் கை விட்டு போகாத அதிகாரம்… !!!


வியாழக்கிழமை, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஜூலை 12-26 தேதிகளில் இரு நாடுகளுக்கிடையில் சிறப்பு திருப்பி அனுப்பும் விமானங்களை இயக்க ஒப்புக் கொண்டதாக மத்திய அரசு அறிவித்தது.


இதை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம் இயக்கப்படும் சார்ட்டர்ட் விமானங்கள், திருப்பி செல்லும் போது, அதில், ICA வினால் (குடியுரிமைக்கான பெடரல் ஆணையம்) அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்களை தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும்.


மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்காக இயக்கப்படும் இந்திய விமானங்கள் மூலம், ஐ.சி.ஏ வினால் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்கள் இந்தியாவில் இருந்து வளைகுடா நாட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


ALSO READ | நமக்குள்ள சண்டை எதுக்கு.. பேசி தீர்க்கலாம் வாங்க…….தூது விடுகிறது சீனா..!!!



"இந்திய அரசுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான நெருக்கமான உறவு நிலவும் காரணத்தினால், தற்போது இந்தியாவில் இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப உதவுவதற்காக, இரு நாடுகளின் சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் இந்த சிறப்பு விமான சேவை வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர்," சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ட்வீட் செய்திருந்தார்