பரேலி: உத்தரபிரதேசத்தின் பரேலியில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு இந்து என்று RSS சங்கத் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அவர் இந்துத்துவா குறித்து பேசுகையில், அனைத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஒன்றாக இருபது தான் இந்துத்துவா என்று கூறினார். அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட எந்தவொரு அதிகார மையத்தையும் ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை என்றும், அரசியலமைப்பை ஆர்.எஸ்.எஸ் சங்கம் கடுமையாக நம்புகிறது என்றும் அவர் கூறினார். இது தவிர, இரண்டு குழந்தைகளின் சட்டம் குறித்து பேசிய அவர், அனைவருக்கும் கட்டாயமாக இரண்டு குழந்தைகள் தான் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. எனது கருத்து என்னவென்றால், மக்கள் தொகை ஒரு பிரச்சினையாக இருக்கிறது, அதேநேரத்தில் நாட்டின் வளர்ச்சியும் முக்கியாகும். எனவே இது குறித்து மத்திய அரசாங்கம் ஒரு வரைவு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் உரையாற்றிய மோகன் பகவத், "இந்த நாடு இந்துக்களுக்கு சொந்தமானது என்றும் 130 கோடி மக்கள் இந்துக்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கூறும்போது, அது ஒருவரின் மதம், மொழி அல்லது சாதியை மாற்ற விரும்புகிறோம் என்று அர்த்தமல்ல.. "அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட எந்த அதிகார மையமும் எங்களுக்கு தேவையில்லை, ஏனெனில் நாங்கள் அதை நம்புகிறோம்." அவர் கூறினார், 


உணர்ச்சிபூர்வமான ஒருங்கிணைப்பைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால் உணர்ச்சி என்றால் என்ன? அந்த உணர்வு என்னவென்றால், இந்த நாடு நம்முடையது, நாங்கள் எங்கள் பெரிய மூதாதையர்களின் சந்ததியினர். நமது நாட்டில் பன்முகத்தன்மை இருந்தபோதிலும், அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்று பகவத் கூறினார். இதை தான் நாங்கள் இந்துத்துவா என்று அழைக்கிறோம் என்றார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.