டேராடூன்: உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் இன்று (திங்கள்கிழமை) மார்பு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்துள்ளார். செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ படி அறிக்கையின் படி, ஹரிஷ் ராவத் டெஹ்ராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ மற்றும் பிற சோதனைகள் உட்பட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டு கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவதற்காக அவர்களுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தியதாக உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் குறித்து வீடியோ ஒன்று வெளியானது. அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய அனுமதி வேண்டும் என சிபிஐ உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தது. இன்று ஹரிஷ் ராவத்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் மத்திய புலனாய்வு அமைப்புக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுவரை மேற்கொண்டு விசாரணைகள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட அட்டையில் ஏஜென்சி ஒரு அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், இந்த வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லவும், ராவத்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் நீதிபதி துலியா பெஞ்ச் சிபிஐக்கு ஒப்புதல் அளித்தது.


2016 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்பொழுது பாஜகவுக்குச் சென்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்காக, அவர்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேரம் பேசியதாக வீடியோ வெளியாகி வெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.