காசி தமிழ்ச்சங்கம் வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உலகின் மிகப்பெரிய மற்றும் பாரம்பரியமான கோயிலான அங்கோர் வாட் கோயிலில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் புணரமைப்பு பணிகள் குறித்து விளக்கினார் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கோர் வாட் கோயில்


அங்கோர் வாட் கோயில் யார் கண்ணிலும் படாமல் பல நூற்றாண்டுகளாக இருந்த நிலையில், அதனை 1860 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆய்வாளர் கண்டுபிடித்தார். அப்போது இடிபாடுகளுடன் மோசமான நிலையில் இருந்த அந்தக் கோயில் வெளியுலகத்தினர் கண்ணில் பட்டபிறகு, அதன் புகழ் உலகெங்கும் பரவியது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கம்போடியாவுக்கு பயணித்து அங்கோவார்ட் கோயிலை கண்டு ரசித்து வருகின்றனர். 



பல்லவ மன்னர்


விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் கட்டுமானம் உலகின் மிகப்பெரிய கட்டுமானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பல்லவ வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் சூர்ய வர்மன் என்ற மன்னர் இந்த கோயிலை பிரம்மாண்டமாக கட்டியுள்ளார். 


மேலும் படிக்க | மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர்... மாணவர்களுடன் உரையாடினார்!


அங்கோர் வாட் புனரமைப்பு


இந்நிலையில், இந்த கோயிலில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் புனரமைப்பு பணிகள் குறித்து காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார். நிகழ்ச்சியில் இது குறித்து அவர் பேசும்போது, இந்தியாவுக்கு தொன்மையான நாகரீகம் உள்ளதால், உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் கோயில்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு உதவி வருவதாக தெரிவித்தார். அதனடிப்படையில், அங்கோர் வாட்டில் இருக்கும் கோவில் வளாகத்தையும் மத்திய அரசு சீரமைத்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.



கோயில்கள் புனரமைப்பு 


தொடர்ந்து பேசிய அவர், சீனாவிலும் இந்து கோயில்கள் இருப்பதை பார்த்திருப்பதாக குறிப்பிடும் அவர், தென்கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் பண்டையகால தொடர்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்து கோயிலை கட்டியுள்ளதாக கூறிய அமைச்சர் ஜெய்சங்கர், பஹ்ரைனில் கோயில் கட்ட ஒப்புதல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவில் 1000க்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதாகவும், வியட்நாமிலும் பல பணிகள் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | 'நீங்க ஏன் நம்பர் 1 ஆகல...?' அசால்ட்டாக ஆன்சர் சொன்ன ஆனந்த் மஹிந்திரா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ