அசாமில் நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் விவகாரத்தில் ராணுவ மேஜர் ஜெனரல் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1994ம் ஆண்டு அசாம் மாநிலத்தின்  கிழக்குப் பகுதியில் உள்ள தாங்காரி என்ற இடத்தில் திடீரென 5 இளைஞர்கள் மாயமாகினர். இவர்களை ராணுவத்தினர் சிலர் பிடித்துச் சென்றதாகவும், அதன் பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அந்த 5 இளைஞர்கள் உல்பா பயங்கரவாதிகள் என நினைத்து ராணுவ அதிகாரிகள் அவர்களை பிடித்ததாக கூறியிருந்தனர்.


ஆனால் இந்த சபவத்தை கண்டித்து அசாம் கனபரிஷத் கட்சியினர் போராட்டம் நடத்தியதயுடம், பதவி உயர்வுக்காகவே இந்த போலி என்கவுன்டரை நடத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கு ராணுவ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மேஜர் ஜெனரல் ஏ.கே. லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ மற்றும் ஆர் எஸ் சிபிரன், கேப்டன் பொறுப்பில் இருந்த திலீப் சிங் மற்றும் ஜெகதியோ சிங் மற்றும் நாயக் பொறுப்பில் இருந்த அல்பிந்தர் சிங் மற்றும் ஷிவேந்தர் சிங் ஆகியோர் குற்றவாளிகள் என ராணுவ கோர்ட் தீர்ப்புக் கூறியதுடன் அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது ராணுவ கோர்ட்.