விவசாயிகள் உருளைக்கிழங்குகளை சாலையில் கொட்டி போராட்டம்!!
உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.4 ஆக வீழ்ச்சியடைந்ததால் உருளைக்கிழங்குகளை சாலையில் கொட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.4 ஆக வீழ்ச்சியடைந்ததால் உருளைக்கிழங்குகளை சாலையில் கொட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை அரசு நிர்ணயிக்காததால் ஆத்திரத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உருளைக்கிழங்குகளை லக்னோவில் உள்ள உத்தரப்பிரதேச சட்டசபை வளாகம் அருகே உள்ள சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் சாலைகளில் கிடக்கும் உருளைக்கிழங்குகளை துப்புரவு பணியாளர்கள் தற்போது அகற்றி வருகின்றனர்.