ரஃபேல் தீர்ப்பு: பொய்களுக்கு ஆயுள் குறைவு - நிதி மந்திரி அருண் ஜேட்லி
ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பொய்யுக்கு ஆயுள் குறைவு என நிதி மந்திரி அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பொய்யுக்கு ஆயுள் குறைவு என நிதி மந்திரி அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.
இந்தநிலையில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வந்த உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், ரஃபேல்’ போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ‘ரஃபேல்’ போர் விமானங்கள் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானது தான். இது நாட்டிற்கு தேவையானது. மேலும் போர்விமானங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல. எனவே ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் கருதுகிறது. எனவே ‘ரஃபேல்’ போர் விமானங்கள் வாங்கியதை குறித்து விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுக்குறித்து பிஜேபி தலைவர்கள் கருத்து கூறிவருகின்றனர். மேலும் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறிவருகின்றனர்.
ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு குறித்து கருத்து தெரிவித்த நிதி மந்திரி அருண் ஜேட்லி, உண்மைக்கும் பொய்களுக்கும் இடையில் ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. பொய்களுக்கு வயது மிகவும் குறைவு. ரபேல் ஒப்பந்தம் மோளம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக நலன்களில் முன்னேற்றம் காணப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்தார்.
அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசாங்கத்தின் வெற்றி என்று கூறியுள்ளார். ரபேல் விஷயத்தில் அனைத்து விதமான கேள்விகளுக்கு நான் பதில் அளித்துள்ளேன். அதனால் தான் ரபேல் ஒப்பந்தத்தில் உள்ள எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டதாக உச்ச நீதிமன்றம் கூறியது என தெரிவித்தார்.
ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலமாகி உள்ளது என்று பி.ஜே.பி தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.