PM Cares குறித்து Tweet போட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக FIR
காங்கிரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், PM Care Funds எதிராக பகிரப்பட்ட ட்வீட் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடகாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: காங்கிரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் கேர்ஸ் ஃபண்டுக்கு (PM Care Funds) எதிராக பகிரப்பட்ட ட்வீட் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது (FIR Against Sonia Gandhi) கர்நாடகாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டில் பிரதமர் கேர்ஸ் நிதி தொடர்பாக தவறான கருத்து பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரிவீன் கே.வி என்ற நபரின் புகாரின் பேரில் சிவமோகா மாவட்டம் சாகர் நகர போலீசார் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனர். காங்கிரசின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட கருத்து, "ஆதாரமற்றது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று புகாரில் கூறப்பட்டு உள்ளது. இதனையடுத்து ஐபிசியின் 153 மற்றும் 505 (1) (பி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிரகா வழக்கை பதிவு (FIR Against Sonia Gandhi) செய்ததை கர்நாடக மாநில காங்கிரஸ் கண்டித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மே 11 மாலை 6 மணியளவில் காங்கிரஸ் இந்தியா (INCIndia) ட்விட்டர் கணக்கு பக்கத்தில், பி.எம் கேர்ஸ் நிதியை (PM CARES Fund) தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்திற்கு உதவ மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். ஆனால் அதைத்தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, அவநம்பிக்கையை ஏற்படுத்த நினைக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) மற்றும் காங்கிரஸ் (Congress) தொழிலாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டு உளது.
இந்த வழக்கை பதிவு செய்ததைக் கண்டித்து கர்நாடக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுபாஷ் அகர்வால், “அரசாங்கத்தை கேள்வி கேட்பது எதிர்க்கட்சியின் பொறுப்பு” என்றார். எதிர்க்கட்சியின் குரல் அடக்கப்பட்டால், ஜனநாயகம் முடிவுக்கு வரும். பிரதமரின் நிவாரண நிதியம் ஏற்கனவே இருக்கும்போது பிரதமர் கேர்ஸ் நிதி தேவையில்லை என்று கட்சி முன்பிருந்து காங்கிரஸ் கட்சி கூறி வருவதாகவும் அகர்வால் கூறினார்.