சரிதா நாயர் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாக உம்மன் சாண்டி மீது வழக்குப்பதிவு....
சரிதா நாயர் புகாரின் பேரில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேணுகோபால் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
சரிதா நாயர் புகாரின் பேரில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேணுகோபால் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
கேரளாவில் காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி 2011 முதல் 2016 வரை முதல்வராக ஆட்சியில் இருந்தார். கேரளா மாநிலத்தில் சோலார் பேனல் தகடு அமைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்த சரிதா நாயரின் நிறுவனம் பணமோசடி செய்ததாக சரிதா நாயா் கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யபட்டார்.
இதையடுத்து, ஜாமீனில் வெளிவந்த தொழிலதிபர் சரிதா நாயர், உம்மன் சாண்டி மற்றும் ஆலப்புழா தொகுதி எம்.பி., கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.
ஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளான இருவரும் தங்கள் மீதான புகாரை மறுத்தனா். மேலும், சோலார் பேனல் பொறுத்தும் பணியை தனது நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய பலருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தன்னை சிலா் பாலியல் வன்கொடுமையும் செய்தனா். இது தொடா்பாக உம்மன் சாண்டியை பலமுறை நேரில் சந்தித்து போசியதாகவும், அப்போது உம்மன் சாண்டியும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவா் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவரை அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், விசாரணைக்கு மட்டுமே ஆஜராகி வந்தனர். இந்நிலையில் தற்போது இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தை திசை திருப்பவே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.