நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தீ விபத்து!!
டெல்லியில் நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) காலை தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லியில் நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தின் (Parliament Annexe building) ஆறாவது மாடியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) காலை தீ விபத்து ஏற்பட்டது. பொங்கி எழுந்த தீ ஜுவாலைகளைக் கட்டுப்படுத்த ஏழு தீயணைப்பு வண்டிகள் (Fire Tenders) வரவழைக்கப்பட்டன. தீக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் ஷார்ட் சர்க்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.
நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காலை சுமார் 7.30 மணியளவில் தீயணைப்புப் படைக்கு அழைப்பு வந்ததாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வண்டிகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன. தீ ஆறாவது மாடியில் இருந்த ஒரு அறையில் மட்டுமே பரவி இருந்தது என்று அறியப்படுகிறது.
ALSO READ: உ.பி., ஹரியானா, டெல்லியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்பு சேவையின் இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர் இழப்பு பற்றியும் உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
தீ பற்றியிருப்பது உடனடியாக கண்டறியப்பட்டு தீயணைப்புப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டதால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என ஒரு அதிகாரி தெரிவித்தார். சிறிய அளவு அஜாக்கிரதைக் கூட தீயை மற்ற அறைகள் மற்றும் மற்ற தளங்களுக்கு பரவச் செய்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 48 நாட்களுக்கு பிறகு இந்திய பெருநகரங்களில் பெட்ரோல் விலை உயர்வு