புதுடெல்லி: அரசின் ஒப்புதல் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஒன்பது நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், நாட்டின் நீதி அமைப்பில் புதிய விடியல் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பதவிப் பிரமாண விழா உச்ச நீதிமன்றத்தின் (Supreme Court) கூடுதல் கட்டிட வளாகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றதாக உச்ச நீதிமன்ற மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று பதவிப் பிரமாணம் பெற்ற ஒன்பது நீதிபதிகள், நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா, நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி பி.வி. நாகரத்னா, நீதிபதி சுடலயில் தேவன் ரவிக்குமார், நீதிபதி எம்.எம்.சுந்த்ரேஷ், நீதிபதி பெலா மதுர்யா திரிவேதி மற்றும் நீதிபதி பமிதிகாந்தம் ஸ்ரீ நரசிம்ஹா ஆகியோர் ஆவர்.



ALSO READ: அனைத்து வழக்குகளிலும் கைது நடவடிக்கை என்பது கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு


"உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒன்பது நீதிபதிகள் (Judges) ஒரே நேரத்தில் பதவியேற்பது இதுவே முதல் முறை" என்று உச்சநீதிமன்றம் திங்களன்று கூறியது.



கோவிட் -19 (COVID-19) விதிமுறைகளை மனதில் வைத்து விழா நடைபெறும் இடம் முதல் முறையாக அரங்கத்திற்கு மாற்றப்பட்டது. பாரம்பரியமாக, இந்திய தலைமை நீதிபதி தலைமையில், நீதிமன்ற அறை எண் 1 -ல் உறுதிமொழி எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, உச்சநீதிமன்ற கொலிஜியம் ஆகஸ்ட் 17 அன்று உச்ச நீதிமன்ற பெஞ்சில் பதவி உயர்வுக்கு ஒன்பது பெயர்களை பரிந்துரைத்தது.


ALSO READ: Covid Compensation தொடர்பாக 4 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்


ALSO READ: பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்: நீதிபதி வருத்தம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR