டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே ஒரு உடற்பயிற்சி இயந்திரத்தை நிறுவியுள்ளது. அதில், மக்கள் உடற்பயிற்சி செய்து இலவச பிளாட்பார்ம் டிக்கெட்டைப் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தனித்துவமான முயற்சி குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது மக்களின் உடற்பயிற்சி இலக்குகளுக்கு நட்புரீதியான ஊக்கத்தை அளிக்கிறது என்றார். 


பாஜக மூத்த தலைவர் ஒருவர் தான் உடற்பயிற்சி இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 


 



 


பியூஷ் கோயல் வீடியோவை இவ்வாறு தலைப்பிட்டார்: சேமிப்புடன் உடற்பயிற்சி: உடற்பயிற்சியை ஊக்குவிப்பதற்காக டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் ஒரு தனித்துவமான சோதனை செய்யப்பட்டுள்ளது. இப்போது நிறுவப்பட்ட இயந்திரத்தின் முன் உடற்பயிற்சி செய்தபின் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். என்று பதிவிட்டுள்ளார்.