புதுடெல்லி: கடந்த ஒரு வாரமாக மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக பலர் மரணத்துக்கு ஆளாகி உள்ளனர். இது மட்டுமல்லாமல், வானிலை காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகளும் இடிந்து விபத்துள்ளாகி உள்ளது. அமேதி மாவட்டத்தின் திலோய் தெஹ்ஸிலின் பகுதிக்கு உட்பட கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததால் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணியை மேற்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காந்தி ஜெயந்தி கொண்டாடும் அக்டோபர் 2 ஆம் தேதி தான் மழை காரணமாக அமேதி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் வீடு இடிந்து விழுந்ததால், அதில் ஒரே வீட்டை சேர்ந்த ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் இரண்டு அப்பாவி குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் நபர் பலத்த காயமடைந்துள்ளார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு பேரும் மரணம் அடைந்தனர்.


இந்த கிராமம் உத்தரபிரதேச அரசின் மாநில அமைச்சர் சுரேஷ் பாசியின் கிராமமாகும். அமைச்சரின் உறவுக்காரர் தான் அந்த கிராமத்தின் தலைவரக இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறிகையில், எங்கள் கிராமத்தில் பெய்து வரும் மழை காரணமாக ராம்சுக் யாதவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது, அதில் அவரது மருமகளும் இரண்டு சிறு குழந்தைகளும் சம்பவ இடைத்திலேயே இறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் முழு கிராமமும் துக்கத்தில் உள்ளது எனக் கூறினார்.