பயங்கரவாத தாக்குதலுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டதில் 5 இந்திய வீரர்கள் படுகாயம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரும் வகையில், இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.


இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் மீது சக்தி வாய்ந்த குண்டுகள் வீசிப்பட்டன. 12 மிராஜ் 2,000 ரக போர் விமானங்கள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை சுமார் 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசியதில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்தன.


இந்த நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முன்னறிவிப்பின்றி அத்துமீறி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியது.  இதில் அதிக சக்தி கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. 12 முதல் 15 இடங்களில் நடந்த இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.


இதில் பாகிஸ்தானின் 5 முகாம்கள் அழிக்கப்பட்டன.  அந்நாட்டு ராணுவத்தினரும் காயமடைந்துள்ளனர்.  பொதுமக்களின் வீடுகளை கேடயம்போல் பயன்படுத்தி கொண்டு பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.



எனினும், பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து பாகிஸ்தான் முகாம்களை இலக்காக கொண்டு இந்திய படையினர் தாக்குதல் நடத்தினர்.  இரு தரப்பிலும் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  சிகிச்சைக்கு பின் அவர்கள் சீராக உள்ளனர்.