மாட்டுத்தீவன ஊழல்: லாலுவின் ஜாமீனை சிபிஐ கோர்ட் நீட்டித்தது
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவின் ஜாமீனை சிபிஐ கோர்ட் நீட்டித்துள்ளது.
1990-ம் ஆண்டு பீகார் முதல் அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். இவர் 950 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, லாலு மீது ஊழல் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இந்த வழக்குத் தொடர்பாக லாலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் லாலு பிரசாத் யாதவ் ஜூன் 9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ராஞ்சி சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, இன்று காலை சிபிஐ சிறப்பு கோர்ட்டில் லாலு ஆஜரானார். விசாரணைக்குப் பின்னர் சிபிஐ சிறப்பு கோர்ட் அவரது ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.