ஆந்திர மாநில சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத ராவ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்  கோடல சிவபிரசாத் ராவ். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்தார். ஆந்திரா பிரிக்கப்பட்ட போது ஐதராபாத்தில் ஆந்திர சட்டசபை கட்டிடத்தில் இருந்த பொருட்களை கடந்த 2016 ஆம் ஆண்டு அமராவதி சட்டசபை கட்டிடத்திற்கு மாற்றும் போது ஏராளமான பர்னிச்சர் பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்தது.


புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டார். அப்போது பர்னிச்சர் பொருட்களை அப்போதைய சபாநாயகர் கோடலா சிவபிரசாத் தனது வீட்டுக்கு அனுப்பியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், நான் அந்த பொருட்களை திருடவில்லை. தற்காலிக வளாகத்தில் வைத்தால் அவை சேதமடையும் எனக்கருதி எனது வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் என அவர் விளக்கம் அளித்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.



இந்நிலையில், சிவபிரசாத ராவ் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.