தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க ₹5 கோடி பேரம்: மாயாவதி மீது புகார்
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 5 கோடி ரூபாய் கேட்டதாக MLC குற்றம்சாட்டு...
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 5 கோடி ரூபாய் கேட்டதாக MLC குற்றம்சாட்டு...
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (நவம்பர் 12) அன்று நடைபெறுகிறது. இதனால் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. மொத்த முள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 72 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் கடைசி நாள் என்பதால், தேர்தல் பிரச்சாரம் அங்கு அனல் பறக்கிறது. முன்னாள் எம்.எல்.சி.யான முகுல் உபாத்யாய், தற்போதைய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவான ராம்வீரின் சகோதரர் ஆவார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் இவரை அண்மையில் கட்சியில் இருந்து மாயாவதி நீக்கினார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முகுல் உபாத்யாய், வரும் மக்களவைத் தேர்தலில் அலிகார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிப்பதற்கு மாயாவதி தன்னிடம் 5 கோடி ரூபாய் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.