ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 இன் கீழ் வழங்கப்படும் அதிகாரம் நீக்கப்பட்டால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என அம்மாநில முன்னால் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி எச்சரித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் மாநில பி.டி.பி. தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது கூறியதாவது:-


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 இன் கீழ் வழங்கப்படும் அதிகாரம் நீக்கப்பட்டால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று அச்சுறுத்தியுள்ளனர். நாட்டின் நலனை பாதுகாப்பதில் மோடி அவர்கள் வாஜ்பாய் போல மாற வேண்டும். பாகிஸ்தானிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார்.


தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால் பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை நடத்த வேண்டும். காஷ்மீர் மாநில நலனுக்காக பிரதமர் மோடி அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நட்பை வளர்க்க வேண்டும். 


மறைந்த முன்னால் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் போல இருநாடுகளுக்கு இடையே சமாதான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி(பி.டி.பி) தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால், முதலில் காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும். 


உச்சநீதிமன்றத்தில் 35-ஏ சட்டப்பிரிவை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளதற்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்தனர்.