நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் போட்டி?
நாட்டின் அடுத்த பிரதமர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்!
நாட்டின் அடுத்த பிரதமர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்!
நாட்டின் அடுத்த பிரதமரான ராகுல் காந்தி கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமைய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி அமைய உள்ளதாகவும், ராகுல் தான் அடுத்த பிரதமர் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக்கூட்டம் ஒன்றில் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் வரும் மக்களவை தேர்தலில் ராகுல், தமிழகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் மற்றும் திமுக.,-வினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி., தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் ராகுல், கர்நாடகாவில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமைய்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இந்திய தலைவர்களை கர்நாடகா எப்போதும் ஆதரித்துள்ளது. 1978-ல் இந்திரா சிக்மகளூர் தொகுதியிலும், 1999-ல் சோனியா பெல்லாரி தொகுதியிலும் போட்டியிட்டு, தங்களின் பலத்தை நிரூபித்துள்ளனர்.
நமது அடுத்த பிரதமரான ராகுலும் கர்நாடகாவின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இந்த கோரிக்கையை ராகுல் பரிசீலிக்க வேண்டும்.
தென்னிந்தியாவில் எங்களின் பிரதிநிதியாக அவர் இருக்க வேண்டும். அதற்காக அவர் கர்நாடகாவை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.