முன்னாள் IAS அதிகாரி ஷா பைசல் நாளை புதிய கட்சி தொடங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முஸ்லிம் மக்களிடத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடப்பதாக குற்றம்சாட்டி தனது அரசுப் பணியை ராஜினாமா செய்த காஷ்மீர் (முன்னாள்) IAS அதிகாரி ஷா பைசல் நாளை புதிய கட்சி தொடங்கவுள்ளார்.


2009-ஆம் ஆண்டு IAS தேர்வில் முதலிடம் பிடித்த ஷா பைசல், பின்னர் மத்திய அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தார். இவர் தனது IAS பதவியை இரு மாதங்களுக்கு முன்பாக ராஜினாமா செய்தார்.


காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் அசாதாரணமான அரசியல் கொலைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அரசாங்கத்தில் முஸ்லிகள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி ஷா பைசன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


மேலும் ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத் துறை ஆகிய பொது நிறுவனங்கள் ஆகியவை சீர்கெட்டுப்போனதால் நாட்டின் அரசியலமைப்பு முறைக்கே குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.


தனது ராஜினாமாவை தொடர்ந்து முழுமூச்சாக மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து இளைஞர்களை அவர் சந்தித்தார். காஷ்மீரில் "ஊழல் இல்லாத, தூய்மையான மற்றும் வெளிப்படையான" அரசியலை உருவாக்க முயன்றுவருவதாகக் கூறி இளைஞர்களை ஆதரவு கோரி வந்தார். இந்நிலையில் நாளை அவர் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.


அவர் தோற்றுவிக்கும் புதிய கட்சி ஸ்ரீநகரின் ராஜ்பாக் பகுதியில் நாளை தொடங்கப்பட உள்ளது. இதற்கான தொடக்கவிழா ராஜ்பாக் கிண்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.