புதுடெல்லி: பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் முதல் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை வரை மத்திய அரசை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு சந்தித்துக்கொண்டு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதை விட முன்னாள் பிரதமர் நேரு மீது குற்றம் சுமத்துவதில் மோடி அரசு அதிக ஆர்வம் காட்டி வருவதாக அவர் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றில் மத்திய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். நமது எல்லையில் வந்து சீனா அமர்ந்திருக்கிறது, ஆனால் அதன் உண்மைகளை மறைப்பதில் மும்முரமாக மத்திய அரசாங்கம் உள்ளது என்றார். பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலையொட்டி அவரின் அறிக்கை வந்துள்ளது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியவை.


அனைத்திலும் மோடி அரசு தோல்வி:


பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. விவசாயிகள் நடத்திய போராட்டம் பற்றியும் மத்திய அரசை நோக்கி கேள்விகளை எழுப்பினார். இது தவிர, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தாலும் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார். அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் ஒருபோதும் நாட்டை காவு கொடுக்கவில்லை, மற்றும் உண்மையை மறைக்கும் வேலையும் செய்யவில்லை என்று அவர் கூறினார். பாஜக தலைமையிலான அரசுக்கு பொருளாதாரக் கொள்கைகள் புரியவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடினார். உள்நாட்டு பிரச்சினையில் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது என்றார். 


மேலும் படிக்க: விவசாயிகள் போராட்டம் வாபஸ்! ஓராண்டுக்கு பிறகு வீடு திரும்பும் உழவர்கள்


தவறுகளை மோடி அரசு ஒப்புக்கொள்வதில்லை: 


ஒருபுறம் மக்கள் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறார்கள், மறுபுறம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மத்திய அரசாங்கம் இன்னும் குற்றம் சாட்டுகிறது என்று முன்னாள் பிரதமர் சிங் கூறினார். மோடி அரசு கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. தவறுகளை ஒப்புக்கொள்வதற்கும் அவற்றைத் திருத்துவதற்கும் பதிலாக, அவர்கள் பழைய விஷயங்களைப் பற்றி தான் பேசி வருகின்றனர் என்றார்.


பஞ்சாபியர்களை இழிவுபடுத்த பாஜக முயற் செய்தது: 


ஃபெரோஸ்பூரில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் கான்வாய் சிக்கிக்கொண்டதை மேற்கோள்காட்டி பேசிய காங்கிரஸ் மூஒத்ஹ்ட தலைவர் மன்மோகன் சிங், சன்னி மீது பழியை போட்டு பஞ்சாப் முதல்வரை அவமானப்படுத்த பாஜக முயன்றதாக அவர் கூறினார். இங்கு பஞ்சாப் மற்றும் பஞ்சாபியர்களை இழிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார். 


மேலும் படிக்க: ஜனநாயகத்தை கொல்வது துரதிர்ஷ்டமானது - மோடி அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி


அரசியல் சாசன அமைப்புகளை பலவீனப்படுத்தும் மோடி அரசு: 


பஞ்சாபியர்களின் வீரம், தேசபக்தி மற்றும் தியாகத்தை உலகம் முழுவதும் மதிக்கிறது என்று சிங் கூறினார். ஆனால், அவர்களை பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பேசுவதில்லை. பாரதிய ஜனதா அரசின் தேசியவாதம் ஆங்கிலேயர்களின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. மோடியின் ஆட்சியில் அரசியல் சாசன அமைப்புகள் பலவீனமடைந்து வருகின்றன.


தனது கடமைகளை செய்த சிங்:


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவிக் காலத்தில், அதிகம் பேசுவதை விட தனது கடமைகளை செய்வதையே விரும்பினார். அரசியல் ஆதாயங்களுக்காகப் பிரிவினைக் கொள்கையை ஒருபோதும் ஏற்கவில்லை. மேலும் சர்வதேச அரங்கில் இந்தியர்களின் இமேஜை உயர்த்த பாடுபட்டார்.


மேலும் படிக்க: பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாப் வருவார் என்று எதிர்பார்க்கும் பஞ்சாப் முதலமைச்சர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR