இஸ்ரோவின் முன்னாள் பேராசிரியர் மற்றும் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளரான யு.ஆர்.ராவ் இன்று அதிகாலை காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1932-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் அதம்பூர் என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான நூல்களை கற்று தன்னை மேம்படுத்திக் கொண்ட நிலையில், காஸ்மிக் கதிர்களில் உள்ள எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். 


இதைத் தொடர்ந்து 1975-ம் ஆண்டு இவரது வழிகாட்டுதலின் படி இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஆப்பிள், ரோஹிணி, இன்சாட்-1, இன்சாட்-2 உள்பட பல செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.


பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் செயற்கைக்கோள் மைய இயக்குனராக செயல்பட்டார். மேலும் 10 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக செயல்பட்டார்.


இவர் கர்நாடகாவின் ராஜ்யோத்சவ் விருது, மேகநாத் சாகா, ஜாகீர் உசேன், ஆர்யபட்டா, பத்மபூஷன் உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். உலகின் முன்னணி விண்வெளி விஞ்ஞானியான இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்ரோ வட்டாரத்தில் யு.ஆர்.ராவ் என்று அழைக்கப்படும் பேராசிரியர் உடுப்பி ராமசந்திர ராவ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதயநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை இதய நோய் காரணமாக காலமானார்.