முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ காலமானார்.
ராணுவ மருத்துவமனையில் கடந்த 10ம் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜீ, இன்றூ காலமானார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி குளியலறையில் தவறி விழுந்ததை அடுத்து, தலையில் காயம் ஏற்பட்டதால், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அவசரகால உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார்.
பேராற்றல் மிக்க சொற்பொழிவாளரும் அறிஞருமான பிரணாப் முகர்ஜீ இந்தியாவின் 13 வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு காங்கிரஸின் தலைவராக இருந்தார். ஜூலை 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.