முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல்நல குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி (66) கடந்த 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சோதனையில், இருதயம் மற்றும் நுரையீரல் சரியாக செயல்படாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து இதயம் முறையாக இயங்குவதற்கு மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வழக்கத்தைவிட கூடுதலான செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 


இதையடுத்து, அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்ததலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி ஆகியோர் மருத்துவமனையில் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதியில் இருந்து ஜெட்லியின் உடல்நலன் குறித்து எய்ம்ஸ் நிர்வாகம் எந்தவிதமான அறிக்கையும் ஊடகங்களுக்கு அளிக்கவில்லை. இருப்பினும் ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு பிரிவுகள் கொண்ட சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர். 


இதை தொடர்ந்து இன்று அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிற்பகல் 12.07 மணியளவில் ஜெட்லி உயிரிழந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த லோக்சபாதேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.