பரேலி: விதியை மதியால் வெல்ல முடியுமா? என்ற கேள்வி கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு புறம் விதிப்படி எப்படியோ அப்படி தான் தான் வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இதில் எது உண்மை? என்று தெரியாது. ஆனால் ஒருவருக்கு மரணம் என்ற நேரம் வராதவரை, அவரை யாராலும் சாகடிக்க முடியாது என்ற சொல்லுக்கு ஏற்ப ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் ஆனா பரேலியில் நடந்துள்ளது. அதாவது பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கூறி தகனம் செய்ய குழி தோன்றிய போது, உயிருடன் ஒரு குழந்தை குழியில் இருந்த சம்வம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமக்கு கிடைத்த தகவலின் படி, சிபிகஞ்சில் வசிக்கும் ஹிதேஷ் குமாரின் மனைவி வைஷாலி ஒரு பெண் ஆய்வாளர். அவர் கர்ப்பமாக இருந்தார். ஆனால் குழந்தை பிறகும் காலத்திற்க்கு முன்கூட்டிய ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்த குழந்தை சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டது. இறந்த பெண் குழந்தையை அடக்கம் செய்ய குடும்பத்தினர் சுடுகாட்டில் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில், அருகில் மூன்று அடி ஆழம் உள்ள குழியில், ஒரு குடத்தில் உயிருடன் ஒரு குழந்தை இருந்ததை கண்டார்கள்.


குழந்தை அழுவதைப் பார்த்து, மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், அதன்பின்னர் இந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைக்கு சீதா என்று பெயரிட்டனர்.


இதுபோன்று குழந்தையை குழியில் புதைத்தது யார் என்பது இன்னும் தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைச் செய்த குடும்பத்தினரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.