சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் BSF வீரர்கள் பலி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநிலம் கங்கரில் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் மீது  மாவோயிஸ்டுகள் நடத்திய த்டீர் தாக்குதலில் 4 எல்லை பாதுகாப்பு வீரர்கள்  பலியாகியுள்ளார். மேலும், இருவர் படுகாயமடைந்துள்ளனர். 


சத்தீஸ்கர் மாநிலம் கங்கரில் பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கியிருப்பதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் கங்கரில் பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர்.



இதனால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு எல்லை காவல் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், இந்த தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தனர். இதியடுத்து காயமடைந்த வீரர்களை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதை தொடர்ந்து மேலும் மாவோயிஸ்டுகளை பளிதீர்க்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.