தெலுங்கானா சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவின் பப்பேடப்பள்ளி பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் சென்ற கார் இன்று காலை விபத்துக்குள்ளானதில், 2 குழந்தைகள் உள்பட 4 பேர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளர்.


ஐதராபாத்-கரிமநகர் ராஜிவ் ராதேரி சாலையில் அமைந்திருக்கும் கன்டப்பள்ளி என்னும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் பெயர் அருண் குமார், அவரது மனைவி சௌமியா, குழந்தைகள் அகிலேஷ் குமார் மற்றும் ஷானவி என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அருண்குமார் பப்பேடப்பள்ளி பகுதியில் சொந்தமாக பள்ளி ஒன்றி நிர்வகித்து வருவதாக தெரிகிறது. தொழில் ரீதியான போட்டியின் காரணமாக யாரேனும் இவரை கொலை செய்ய முயற்சித்து இருக்கலாமா என்னும் சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைப்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சம்பயிடத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சுல்தானாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.