கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத குழந்தை, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இறந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை இதயம் தொடர்பான வியாதிகளால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையின் குழந்தை மற்றும் தாய் பராமரிப்பு பிரிவில் குழந்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார் எனவும், குழந்தையின் பெற்றோர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி நகரைச் சேர்ந்தவர்கள் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


குழந்தையின் உடல் நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் இறுதியில் மாரடைப்பால் இறந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், மரணத்திற்கான உத்தியோகபூர்வ காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. 


முன்னதாக கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி குழந்தை SARS-CoV-2-க்கு நேர்மறை முடிவு பெற்றது, இருப்பினும் நோய்த்தொற்றின் ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தையின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அந்த நபருக்கும் குழந்தைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றும் குழந்தையின் பெற்றோர் குறித்த பரிசோதனையின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உள்ளூர் ஊடக தகவல்கள் படி குழந்தை ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட போது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது என கூறப்படுகிறது.


கேரளாவின் முதல் COVID-19 மரணம் மார்ச் 28 அன்று எர்ணாகுளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. துபாயில் இருந்து திரும்பிய 69 வயதான ஒருவர், இந்த நோய்க்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த கலாமாசேரி மருத்துவக் கல்லூரியில் இறந்தார்.


தொடர்ந்து மார்ச் 31 அன்று, திருவனந்தபுரத்தில் மாநிலம் தனது இரண்டாவது மரணத்தை பதிவு செய்தது. 68 வயதான பயண வரலாறு இல்லாத ஒருவர், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர் மற்றும் சிறுநீரகம் மற்றும் தைராய்டு தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சையின் போது அவர் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் காலமானதற்கு முன்பு வென்டிலேட்டர் ஆதரவில் இருந்தார் எனவும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


---இந்தியாவில் பதிவான பிற குழந்தை இறப்புகள்---


ஏப்ரல் 19 அன்று, டெல்லியில் ஒன்றரை மாத குழந்தை COVID-19 காரணமாக இறந்தது. அதே நாளில், கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தெலுங்கானாவின் 45 நாள் ஆண் குழந்தையும் காலமானது. பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட இந்த குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 19 அன்று தெலுங்கானா காந்தி மருத்துவமனையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.


இதய அறுவை சிகிச்சைக்காக பஞ்சாபில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறு மாத குழந்தை, வியாழக்கிழமை காலமானார். ஏப்ரல் 8 ஆம் தேதி, SARS-CoV-2 க்கு நேர்மறை சோதனை செய்த 14 மாத சிறுவன் குஜராத்தில் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக இறந்தார்.