டெல்லி: அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் கண்டறியும் சோதனைகள் பொதுமக்களுக்கு இலவசமாக நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புன்பு தெரிவித்திருந்தது. ஆனால் அந்த முடிவில் இருந்து உச்ச நீதிமன்றம் பின்வாங்கியுள்ளது. அதாவது கொரோனா வைரஸ் கண்டறியும் சோதனைகளை யார், யாருக்கு இலவசமாக அளிக்க வேண்டும் என்ற முடிவை அரசே முடிவு  செய்துகொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சோதனைகள் ஏற்கனவே இலவசம் என்றாலும், தனியார் ஆய்வகங்கள் சோதனைக்கு ரூ.4,500 வரை வசூலிக்க அனுமதிக்கக்கூடாது என்ற பொதுநல மனுவை விசாரித்த போது உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் இந்த தீர்ப்பு அளித்துள்ளது. 


தற்போது கொரோனா வைரஸ் டெஸ்டை இலவசமாகப் பெறுவதற்கான தனது பழைய உத்தரவை உச்ச நீதிமன்றம் மாற்றிவிட்டது. இப்போது அதை ஏழை பிரிவுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தியுள்ளது. புதிய உத்தரவின் படி, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள நோயாளிகளுக்கு, ஈ.டபிள்யூ.எஸ் (EWS) மற்றும் ஆயுஷ்மான் இந்தியா திட்டத்திநன் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இலவசம் சோதனை நடத்தப்படும்.


முன்னதாக இந்த உத்தரவில், நாட்டின் உச்ச நீதிமன்றம் கொரோனா வைரஸ் சோதனை அரசு அல்லது தனியார் ஆய்வகங்களில் இலவசம் என்று தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்குப் பிறகு, ஒரு மருத்துவர் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஏழைகளுக்கு மட்டுமே இலவசமாக பரிசோதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.


கொரோனா வைரஸை பரிசோதிக்க, NABL ஆல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள் மட்டுமே, அதாவது சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் அல்லது உலக சுகாதார அமைப்பு அல்லது ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) அங்கீகரித்த எந்தவொரு நிறுவனமும் மூலம் இருக்க வேண்டும் எனவும் அவர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். என்வே கொரோனா வைரஸை இலவச பரிசோதனை குறித்து சரிபார்க்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது


உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனியார் நிறுவனங்களால் கொரோனா பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ .4,500 நிர்ணயிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) ஆலோசனையை கேள்வி எழுபியது. இதுபோன்ற அனைத்து சோதனைகளும் அங்கீகரிக்கப்பட்ட நோயியல் ஆய்வகங்களால் நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இலவசமாக சோதனையை பரிந்துரைத்து, மனுதாரர் தனியார் ஆய்வகங்களின் சோதனைக் கட்டணத்தை மறைப்பது அரசியலமைப்பின் கொள்கைகளையும் மதிப்புகளையும் மீறுவதாகவும் கூறினார்.