காதலின் நினைவுச்சின்னமாக போற்றப்படும் தாஜ்மகாலை பார்க்க பலருக்கும் ஆசை இருக்கும்.  அப்படி நீண்ட நாள் ஆசையுடன் காத்திருந்தவர்களுக்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பம் ஆகும்.  இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிப்ரவரி 27, 2022 முதல் மூன்று நாட்களுக்கு( 28/02/2022, 01/03/2022) நினைவுச்சின்னங்களுக்கு இலவச நுழைவை அனுமதிக்க முடிவு செய்து இருப்பதாக கூறியுள்ளது.  அதன்படி பிப்ரவரி 27-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/03/14/185983-tajmahal.jpg


மேலும் படிக்க | கிரிப்டோகரன்சி விளம்பரம் தொடர்பாக கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டது ASCI


இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) அதிகாரிகள் கூறுகையில், இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்த நாட்களில் ஐந்தாவது முகலாய பேரரசர் ஷாஜகானின் 367வது உர்ஸ் விழா கொண்டாடப்படுகிறது.  இந்த விழாவானது மூன்று நாட்கள் கோலாகலமாக தாஜ்மஹாலில் நடைபெறும், இந்த விழாவானது வருடம் தோறும் தவறாமல் இதே தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.  அவ்வாறு கொண்டாட்டம் நிகழும் இந்த மூன்று நாட்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு இலவச பாஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த வருடமும் நடக்கும் இந்த விழா சமயத்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.



மேலும் ஏஎஸ்ஐ கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் ராஜ்குமார் படேல் கூறுகையில், 27/02/2022 மற்றும் 28/02/2022 ஆகிய தினங்களில், தாஜ்மகாலுக்குள் மதியம் 2 மணி முதல் சூரியன் மறையும் வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அடுத்ததாக 01/03/2022 அன்று, சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச நுழைவு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த விழாவை பார்க்கவும், இலவச அனுமதியை பயன்படுத்தியும் அதிகளவில் மக்கள் கூட்டம் வர வாய்ப்பு இருப்பதால் அந்த மூன்று நாட்களும் தாஜ்மஹாலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.



மேலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் தாஜ்மஹால் வளாகத்திற்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கோவிட் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும் வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும் இந்த விழாவில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் தாஜ்மகாலின் அடித்தளத்திற்குள் இருக்கும் ஷாஜஹான் மற்றும் அவரது மனைவி மும்தாஜ் ஆகியோரின் உண்மையான கல்லறைகளை இந்த தினத்தில் தான் பார்க்கலாம், வருடத்தில் ஒருமுறை தான் பார்வையாளர்களுக்கு உண்மையான கல்லறைகளை காண அனுமதி வழங்கப்படுகிறது.  இதனை காண்பதற்காகவே பலரும் இந்த விழா நாட்களில் இங்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.


மேலும் படிக்க | Ukraine-Russia War, Sensex Crashes: இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR