தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு. மே 1-ம் தேதி முதல் சோதனை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனடிப்படையில் சோதனை முயற்சியாக பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி மாற்றும் திட்டம் முதன் முதலாக புதுச்சேரி, விசாகப்பட்டணம், ஆந்திரா, ராஜஸ்தானின் உதய்பூர், ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது. பிறகு படிப்படியாக நாடு முழுதும் அமல்படுத்தவுள்ளது.


இந்தியாவில் தற்போது பெட்ரோல் - டீசல் விலையை  நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை, இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், விலை மாற்றி அமைக்க படுகிறது. 


அரசியல் சூழ்நிலை காரணங்களுக்காக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட முடியாத நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக பெட்ரோல் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.