2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இவர் தாக்கல் செய்த ஐந்தாவது பட்ஜெட் தாக்கல் இது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பட்ஜெட் தாக்கல் சரியாக 11-மணிக்கு துவங்கி மதியம் 12.50-க்கு முடிவடைந்தது. இந்த பட்ஜெட் தாக்கலை நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வாசித்தார். 


இதில், விவசாய கடன் இலக்கு 11 கோடி, ஊரக கட்டமைப்பு மேம்பாடுக்கு 14.34 கோடி, டிஜிட்டல் இந்தியாவிற்கு 3,073, மகளிர் நல மேம்பாடுக்கு 1.21 லட்சம் கோடி, உணவு மானியத்திற்கு 1.69 லட்சம் கோடி, இரயில்வே துறைக்கு 1.48 லட்சம் கோடி என பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.  


இந்த மத்திய பட்ஜெட்டின் படி விலை உயர்வு பெறும் சில பொருட்களின் மீது வரி விதிப்பு மற்றும் சுங்க கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. மத்திய நிதி நிலை அறிக்கை படி விலை உயர்வு பெறும் சில பொருட்களின் மீது வரி விதிப்பு மற்றும் சுங்க கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. பட்ஜெட் படி, மொபைல் போன்களின் சுங்க வரி 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளது. கல்வி செஸ் 3% முதல் 4% வரை அதிகரித்துள்ளது. 


நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையின் படி எந்தெந்த பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதை பார்ப்போம்:


விலை உயர்வு பொருட்கள்:


கார் மற்றும் பைக்.
மொபைல் போன்கள்.
வெள்ளி பொருட்கள்,
தங்க பொருட்கள், 
பர்னீச்சர் பொருட்கள், 
மெத்தைகள், 
காலணிகள், 
விளையாட்டுப் பொருட்கள், 
காய்கறி, ஆரஞ்சு மற்றும் கிரான்பெர்னி உள்ளிட்ட பழச்சாறு, 
வாசனை திரவியங்கள் மற்றும் கழிப்பறை வாசனை திரவியம், 
அழகுசாதன கிரீம்கள்,
பல் சிகிச்சை பொருட்கள்,
ஹேர் ரிமூவர் சாதன பொருட்கள்
ஆபரண கற்கள்,
வைரம்,
ஸ்மார்ட் கை கடிகாரங்கள்,
எல்.சி.டி, எல்.இ.டி டி.வி பேனல்கள், 
சன்ஸ்கிரீன் மற்றும் மெனிகியூர், பெடிகியூர் தயாரிப்பு சாதனம்,
ரேடியல் டயர்கள்,
பட்டுத்துணி வகைகள், 
சிகரெட், 
லைட்டர்கள், 
சமையலுக்கு பயன்படுத்தும் ஆலிவ் மற்றும் கடலை எண்ணெய் விலை உயருகிறது.


விலை குறையும் பொருட்கள்: 


வறுக்கப்படாத முந்திரிக் கொட்டைகள், 
சோலார் கிளாஸ்கள்,
காதுகேளாதோர் பயன்படுத்தும் கருவிகள், 
பால்,
ஸ்க்ரூ, 
போன்ற பொருட்களின் விலை குறைவு.