ஸ்ரீதேவிக்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதால் மும்பையில் அவரது வீடு முன்பு கண்ணீருடன் எராளமான ரசிகர்கள் திரண்ட காத்து கொண்டு இருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துபாயில் மாரடைப்பால் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் தற்போது மும்பைக்கு அம்பானியின் தனி விமானம் மூலம் வந்து கொண்டு இருக்கின்றது.


தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!


துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். 


இந்நிலையில், அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சில நடைமுறைகள் முடிந்த பின்னர் இன்று அவரது உடல் அம்பானி அனுப்பிய தனிவிமானத்தில் மும்பை வருகிறது.


அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சில நடைமுறைகள் முடிந்த பின்னர் இன்று அவரது உடல் அம்பானி அனுப்பிய தனிவிமானத்தில் மும்பை வருகிறது.


அங்கு சிறிது நேரம் குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூஹு பகுதியில் உள்ள பவன் ஹான்ஸ் இடுகாட்டில் அவருக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


அவரது உடலை காண வேண்டும் என்பதற்காக மும்பை அந்தேரியில் உள்ள லோகன்ட்வாலா காம்ப்ளஸில் உள்ள அவரது வீடு முன்பு ரசிகர்கள் திரண்டுள்ளனர். இனி ஸ்ரீதேவியை எப்போதும் பார்ப்போம் என்று குமுறி வருகின்றனர்.


ஸ்ரீதேவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர் மும்பை வந்துள்ளார்.