2015, 2016, 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டிற்கான "காந்தி அமைதி பரிசு" அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1995-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துவங்கி அவரது நினைவாக அமைதிக்கான காந்தி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசால் வழங்கப்படும் இந்த பரிசு தொகுப்பில் ஒரு கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் ஒரு நேர்த்தியான பாரம்பரிய கைவினை / கைத்துண்டு உருப்படி போன்றவை இடம்பெறும்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வு குழு, இந்த பரிசுக்கு உரியவர்களை தேர்ந்தெடுத்துள்ளது. பிரதமரை தவிர உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் மல்லிகர்ஜூனா கார்கே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் LK அத்வானி ஆகியோர் குறிப்பிட்ட ஆண்டிற்கான வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளனர். 


நேற்று நடைப்பெற்று இந்த தேர்வு குழு ஆலோசனை கூட்டதிற்கு பின்னர், குறிப்பிட்ட நான்கு ஆண்டுகளுக்கான காந்தி அமைதி பரிசு வெற்றியாளர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த பட்டியலின்படி...


  • 2015 - கன்னியாகுமரியை சேர்ந்த Vivekananda Kendra (கிராமப்புற மேம்பாடு, கல்வி, இயற்கை வளங்களின் வளர்ச்சி ஆகியவற்றிற்கான பங்களிப்புக்காக).

  • 2016 - கூட்டாக Sulabh (இந்தியாவில் சுகாதார நிலை மற்றும் விடுதலை மேம்படுத்த அளித்து வரும் பங்களிப்பிற்காக) மற்றும் AkshayaPatra அறக்கட்டளை (சர்வதேச அளவில் இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியதற்காக)

  • 2017 - EkalAbhiyan Trust (கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களுக்கு அதிகாரமளித்தல், பாலினம் மற்றும் சமூக சமத்துவம் தொடர்பான கல்வி வழங்கியதற்காக)

  • 2018 - Shri YoheiSasakawa (இந்தியா மற்றும் உலகம் முழுவதும் தொழுநோய் நீக்குதல் தொடர்பான பங்களிப்பு அளித்தமைக்காக) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.