விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் மட்டும் இன்றி வட மாநிலங்களிலும் கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம். இந்நிலையில், மஹாராஷ்டரா மாநிலம் அவுரங்க பாத்தில் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டியுள்ளது. பொதுவாக பிள்ளையார் சிலைகளை மண்ணிலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற கலவைகளிலும் உருவாக்குவார்கள்.ஆனால் kharadi என்ற மகராஷ்ட்டிர கிராமத்தில் சுற்றுச்சூழலை பேணும் வகையில் குளத்தின் மண்ணால் பச்சை வயல் வெளியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.


ஹைதராபாத்தில் உள்ள கைராத்தாபாத் விநாயகர் கோவிலுக்கு மிகப்பெரிய ராட்சத லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன ராவ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு லட்டு பிரசாதத்திற்கு 220 கிலோ சர்க்கரை, 145 கிலோ பசு நெய், 175 கிலோ கொண்டைக் கடலை, 25 கிலோ முந்திரிப்பருப்பு பயன்படுத்தப்பட்டுள்ளன. கோவிலில் படையலிடப்பட்டு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. 


கோவா மாநிலம் பனாஜியில் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தயாராகினர். பல்வேறு பூஜைப் பொருட்களை வாங்குவதிலும் பண்டிகையை இனிமையாக்க இனிப்புகளையும் வாங்கிச் சென்றனர்


விநாயகர் கோவில்களில் பிரசித்தி பெற்ற மும்பையின் சித்தி விநாயகர் கோவிலில் இன்று அதிகாலை முதலே திரளாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


இதே போல் மும்பையின் பரேல் பகுதியில் அமைந்துள்ள லால்பாக் கா ராஜா (Lalbagh ka raja) கோவிலில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைக்கு மலர் தூவி அபிசேகம் செய்யப்பட்டது.....!