நாடு முழுவதும் அமலில் உள்ள கட்டுப்பாடுகளால் களையிழந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம், புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் மூலம் அரசின் விதிமுறைகளின்படி விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடி வருகின்றனர்.


கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழி பட கூடாது, சிலைகளை கூட்டமாக சென்று கரைக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதோடு வீடுகளில் மட்டுமே சிலைகளை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாடுகளுக்கு இந்து முன்னணி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்போடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.


ALSO READ | #GaneshChaturthi2020: விநாயகர் சதுர்த்தி பற்றிய சுவாரஷ்யமான சில தகவல்கள்..!


கூட்டங்கள், ஊர்வலங்கள் இல்லாமல் இதை நடத்த முன்பே முடிவு செய்து இருந்தோம். தொடக்கத்திலேயே நாங்கள் இதை முடிவு செய்துவிட்டோம் . காலையில் சிலைகளை வைத்து, மாலையே அதை கரைக்க அனுமதிக்க வேண்டும். கூட்டம் சேராமல் கொண்டாட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அமைதியான முறையில் விழாவை நடத்த திட்டமிட்டு உள்ளோம். தனி தனியாக வீடுகளில், தனியார் இடங்களில் கொண்டாட அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் விழாவை கொண்டாடும் திட்டம் இல்லை. அரசும் அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.