டெல்லியில் உள்ள ஜிபி பந்த் மருத்துவமனையில் செவிலியர்கள் இனி மலையாள மொழியில் பேசக்கூடாது என நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமானது (GIPMER) டெல்லியின் மிகப்பெரும் மருத்துவமனையில் (GB Pant Hospital) உள்ள மையம் ஆகும். இங்கே பணியாற்றும் செவிலியர்கள் அலுவலக மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மலையாள மொழியில் (Malayalam Language) பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இதற்கு செவிலியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


மருத்துவமனையின் சுற்றறிக்கையில் செவிலியர்கள் மலையாள மொழி பேசுவதால் பிற நோயாளிகளுக்கு  அசெளகரியத்தை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதற்கு  செவிலியர்கள் மட்டுமல்லாது பலவேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து மருத்துவமனை, இந்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது. 


காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் இந்த சுற்றறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, 'மலையாளம் வேறு எந்த மொழியையும் போலவே இந்திய மொழி' என்றார்.


ALSO READ | பெட்ரோல் டீசல் விலையில் ‘சதம்’ அடித்த மாநிலங்கள், ‘சதம்’ அடிக்க போகும் மாநிலங்கள்


இந்த விவகாரம் குறித்து டெல்லி சுகாதாரத் துறையும் ஜிபி பந்த் மருத்துவமனைக்கு மெமோ அனுப்பியுள்ளது. மறுபுறம், ஜிபி பந்த் செவிலியர் சங்கத் தலைவர் லிலதர் ராம்சந்தானி கூறுகையில், மருத்துவமனையில் மலையாள மொழி பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நோயாளி சுகாதாரத் துறை மூத்த அதிகாரிக்கு புகார் அளித்ததையடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 'சுற்றறிக்கையில் பயன்படுத்தப்படும் சொற்களுடன் சங்கம் உடன்படவில்லை' என்று கூறினார்.


செவிலியர் பணியில், இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் அதிக அளவில் கேரலாவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நியமிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


ALSO READ | Ugliest language: இந்தியாவின் மோசமான மொழி எது, உளரிய கூகுள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR