புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் தான் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அப்துல் சமத் (Abdul Samad) என்ற அந்த முதியவர் வெளியிட்டிருந்த வீடியோவில், ”சிலர் தன்னுடைய தாடியை வெட்டியதாகவும், "வந்தே மாதரம்" மற்றும் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். அதோடு தன்னை வனப்பகுதிக்கு கடத்திச் சென்று குடிசையில் அடைத்து வைத்து தாக்கியதாகவும்” தெரிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவை, சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்திருந்தனர். "வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும்" தெளிவான நோக்கத்துடன் ட்வீட்டுகள் பகிரப்பட்டன என்று கூறும் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் போலீசார், டிவிட்டர் உட்பட அந்த ட்வீட்டை பகிர்ந்த பலர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.


இந்த "தவறான" பதிவுகள் ஆயிரக்கணக்கான மக்களால் மீண்டும் ட்வீட் செய்யப்பட்டன. இது "இனவாத உணர்வைத் தூண்டும் செயல்" என உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் போலீசார் கூறுகின்றனர்.


Also Read | இந்தியாவில் intermediary platform அந்தஸ்தை இழக்கும் ட்விட்டர்


காசியாபாத்தின் லோனி பத்திரிகையாளர்களான ராணா அய்யூப், சபா நக்வி மற்றும் முகமது ஜுபைர் ஆகியோரின் எஃப்.ஐ.ஆர். ஆன்லைன் செய்தி தளமான "தி வயர்", மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் நிஜாமி, ஷாமா முகமது மற்றும் மஸ்கூர் உஸ்மானி ஆகியோரும் இந்த சம்பவம் தொடர்பான "உண்மைகளை சரிபார்க்காமல்" ட்வீட் செய்ததாகவும், "வீடியோவுக்கு இனவாத நிறத்தை" கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


"வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும்" தெளிவான நோக்கத்துடன் ட்வீட் பகிரப்பட்டதாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது, "தவறான" பதிவுகள் ஆயிரக்கணக்கான மக்களால் மீண்டும் ட்வீட் செய்யப்பட்டன. இந்த செய்தியை பகிரவேண்டாம் என்று திங்கட்கிழமை இரவு காஜியாபாத் காவல்துறையினர் தங்கள் ட்விட்டர் கணக்கின் வழியாக "தெளிவுபடுத்தியுள்ளனர்" என்று அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பயனர்கள் இடுகைகளை நீக்கவில்லை, அவற்றை அகற்ற ட்விட்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


எனவே, டிவிட்டர் (Twitter) மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆன்லைன் செய்தி வெளியீட்டு தளங்களுக்கான அரசாங்கத்தின் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு சமூக ஊடக நிறுவனத்திற்கு எதிரான முதல் வழக்கு இதுவாகும். மைக்ரோ பிளாக்கிங் தளம் "சட்ட பாதுகாப்பை இழந்துவிட்டது" என்று அரசு வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.


Also Read | Liquor Shop: இந்த மாநிலத்தில் நாளை முதல் மதுக்கடை திறக்க அனுமதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR