Bizarre Crime News: திருமண உறவு என்பது மிகவும் சிக்கலுக்கு உரியதாக மாறிவிட்ட இந்த சூழலில், அது சார்ந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அரேங்கி வருகின்றன. திருமணத்தை தாண்டிய உறவு சார்ந்து பல சம்பவங்கள் இப்போது என்றில்லை எப்போதும் ஆங்காங்கே நடந்து தான் வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆணுறுப்பை அறுத்த காதலி


அந்த வகையில், தற்போது ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று நடந்துள்ளது எனலாம். உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சௌபேபூர் என்ற கிராமத்தில் தான் அந்த சம்பவம் பதிவாகி உள்ளது. zeenews.india.com/tamil/videos/train-standing-on-the-platform-in-up-465541


ஒரு பெண் தனது காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்து, தனது தோழியுடன் உடல் உறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார். அந்த காதலன் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அந்த பெண் காதலியின் ஆணுறுப்பை வெட்டி உள்ளார். சௌபேபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.


மேலும் படிக்க | Dream 11 ரூ. 40 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு...? இது தான் வரலாற்றில் அதிகம் - முழு பின்னணி என்ன?


தோழியுடன் உடலுறவு கொள்ள மறுப்பு


இந்த சம்பவம் குறித்து அந்த காவல் நிலையத்தின் அதிகாரி கூறுகையில், "ஒரு இளைஞர் தனது காதலியை சந்திக்க இரவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த காதலி தனது தோழி ஒருவரையும் அவரது வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். இந்நிலையில், தனது தோழியுடன் உடலுறவு கொள்ளுமாறு காதலனை அந்த காதலி வற்புறுத்தி உள்ளார். 


தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும், அந்த காதலன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுமி அவரது பிறப்புறுப்பை அறுத்தார். இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு, கிராமவாசிகள் ஓடி வந்துள்ளனர். இரவில் மக்கள் கூட்டம் அதிகம் கூடியாதல் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்" என்றார்.


காவல் துறையை அழைத்த மனைவி


இதில் சுவாரஸ்யமாக, காதலியுடன் உறவில் இருந்த அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி உள்ளது. அதாவது, அந்த இளைஞர் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்துள்ளார். காதலியின் வீட்டில் இத்தகைய அதிர்ச்சி சம்பவம் நடந்த பின், வெட்டு காயத்துடன் அந்த இளைஞர் தனது வீட்டில் இருக்கும் மனைவியிடம் தான் ஓடி வந்துள்ளார். மேலும் அந்த இளைஞரை அவரின் மனைவி தான் மருத்துவமனையிலும் சேர்த்தார் என தெரிகிறது.  


இதுகுறித்து அந்த போலீஸ் அதிகாரி மேலும் கூறுகையில்,"அந்த இளைஞர் வீட்டிற்கு வந்தபோது, ​தனது மனைவியிடம் நடந்த சம்பவத்தை விவரித்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரது மனைவி எங்களுக்குத் தெரிவித்தார். நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இளைஞரை முதலுதவிக்காக சௌபேபூர் சமூக சுகாதார மையத்தில் அனுமதித்தோம். பின்னர் அவர் கான்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்" என்றார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க | "காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் வியைாட்டு": எதிர்க்கட்சிகள் மீது சித்தராமையா குற்றச்சாட்டு!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ