கல்லூரி விதியை பின்பற்றாததால் மாதவிடாய் இல்லை என நிரூபிக்க உள்ளாடையை கழற்ற கல்லூரி நிர்வாகம் வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜாராத் மாநிலம் புஜ்ஜில் உள்ள ஸ்ரீ சஜானந்த் பெண்கள் கல்லூரியில்  (Shree Sahajanand Girls Institute) சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயில்கின்றனர். மாணவிகள், மாதவிடாய் நாட்களில் அங்குள்ள கோயில் மற்றும் விடுதி சமையலறைக்குள் செல்லவோ, மற்ற மாணவிகளை தொடவோ கூடாது என்னும் விதியை பின்பற்ற வேண்டும் என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை சில மாணவிகள் மீறுவதாக புகார் எழுந்ததை அடுத்து, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.



இதன்படி, ஒரு பெண் அலுவலர், மாணவிகளிடம் மாதவிடாய் குறித்து அனைவர் முன்னிலையிலும் கேட்டுள்ளார். பின் சந்தேகம் உள்ளவர்களை கழிப்பறைக்கு அழைத்து சென்று உள்ளாடையை கழற்றி, மாதவிடாய் இல்லை என காண்பிக்க வற்புறுத்தியுள்ளார். 68 மாணவிகள் இந்த வற்புறுத்தலுக்கு ஆளானார்கள்.


அதிர்ச்சியடைந்த மாணவிகள், கல்லுாரி அலுவலர்கள் தங்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினர். கல்லூரி அலுவலர்களோ, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர விரும்புபவர்கள் 2 நிபந்தனைகளுடன் வழக்கு தொடரலாம் என்கின்றனர். அதாவது, விடுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இங்கு எதுவும் நடக்கவில்லை என உறுதியளித்து கையெழுத்திடவும் நிபந்தனை விதிப்பதாக மாணவிகள் கூறுகின்றனர். சில மாணவிகள், தாங்கள் குஜராத்தின் கிராமப்புறங்களில் இருந்து வருவதால் விடுதியில் வேறு வழியில்லாமல் தங்க வேண்டியுள்ளதாக கூறுகின்றனர்.